Thursday, 17 September 2015

விருந்திற்கு வா விநாயகனே!!

இன்னல்கள் விளைவிக்கும் வினைகளை
வேரருக்கும் விந்தையின் நாமம்
விநாயகனே!!!

உம்மை வணங்காமல் செல்வேனோ?
ஒரு செயல் செய்வேனோ??
செம்மையாய் செய்வேனோ??

ஞானப்பழத்தை தன் ஞானத்தால்
வென்றோனே!!
பெற்றோரின் பெருமையை இப்புவிக்கு
சமர்ப்பித்தோனே!!
பிள்ளையார்ப் பட்டியின் நாயகனே
விநாயகனே!!

அருள்
புரிய ஆலயம் எதற்கு??
அரச மரத்தையே ஆசனமாய் ஏற்ற
அரும்பெரும் மைந்தனாம் சிவமைந்தனே!!

பிட்டு அவுள் பொறி மோதகம் வடை கடலை
வெல்லம் பழம் பாயாசம் வைத்து
அறுசுவையோடு அன்பையும் கலந்து
அமர்ந்திருக்கின்றோம் உன் சதூர்த்தியில்
விரைந்து விருந்திற்கு வா விநாயகனே!!

No comments:

Post a Comment