Thursday, 17 September 2015

விருந்திற்கு வா விநாயகனே!!

இன்னல்கள் விளைவிக்கும் வினைகளை
வேரருக்கும் விந்தையின் நாமம்
விநாயகனே!!!

உம்மை வணங்காமல் செல்வேனோ?
ஒரு செயல் செய்வேனோ??
செம்மையாய் செய்வேனோ??

ஞானப்பழத்தை தன் ஞானத்தால்
வென்றோனே!!
பெற்றோரின் பெருமையை இப்புவிக்கு
சமர்ப்பித்தோனே!!
பிள்ளையார்ப் பட்டியின் நாயகனே
விநாயகனே!!

அருள்
புரிய ஆலயம் எதற்கு??
அரச மரத்தையே ஆசனமாய் ஏற்ற
அரும்பெரும் மைந்தனாம் சிவமைந்தனே!!

பிட்டு அவுள் பொறி மோதகம் வடை கடலை
வெல்லம் பழம் பாயாசம் வைத்து
அறுசுவையோடு அன்பையும் கலந்து
அமர்ந்திருக்கின்றோம் உன் சதூர்த்தியில்
விரைந்து விருந்திற்கு வா விநாயகனே!!

Monday, 14 September 2015

மூன்றுதமிழ் ஆய்ந்தகவி!!

தாய் மொழியின் பெருமையை உயர்த்திட
தன் மீசையை உயர்த்தியத் தலைவனே!!

சாதிகளெல்லாம் மாண்டு போகாதோ
நீ மறு ஜனனம் எடுத்தால்??

பல யுகமாய் என் தமிழ் தவமிருக்க
அவதாரமாய் பிறந்தாய்
தமிழ் தனலாய் எறிய!!

மரணம் தான் அழிக்குமா உன் வீரத்தை?
காலம் தான் சிதைக்குமா உன் மகத்துவத்தை??

காட்சிப் பிழைதானோ என பாடிய உன் பாட்டில்
பிழைக் காண நக்கீரனுக்கும் தகுதியில்லை!!

காலனை காலால் மிதிக்க அழைத்தாய்
பயமுற்று அவன் காலனாய் அல்லாமல்
களிற்றாய் நெருங்கிவிட்டானே!!
உன் பாதம் படாத பாதகனாகி விட்டானே!!

திரி தீப்பற்றி விளக்கெரிந்ததை கண்டுள்ளேன்
இங்கோ கண்டேன் உன் சிதை தீப்பற்றி
என் தமிழ் அனைந்ததை!!

இருமாப்புடன் எட்டு திசைக்கும் எட்டும்படி
எடுத்துரைப்பேன் இந்த எட்டயபுரத்து சிங்கம்
என் இனம் தமிழினம் என்று!!

Thursday, 10 September 2015

இப்படிக்கு வறுமைக்குரியவன்...

தாயின் அரவனைப்பை பெரும் வயதில்
பசியின் அரவனைப்பையே பெற்றோம்!!
பாலின் ருசி அறியும் பருவத்தில்
பசிக்கு நீரையே ஆகாரமாக்கினோம்!!
பள்ளிச் சென்று கல்விப் பயிலும் வயதில்
கூலி வேலைக்கு சென்று வாழ்வின்
போராட்டங்களையே பயின்றோம்!!
அடுத்த வேளைப் பசியை போக்க
நாவின் ருசியைப் போக்கினோம்!!
பழகும் இடமெல்லாம் பஞ்சமே தென்பட்டது!
குப்பைக்கூடமே கூடாரமானது!!
இறைவா!!நான் வேண்டுகிறேன், இந்த
இரக்கமற்றவர்களின் இருதயம் மாறுவதர்கல்ல
அடுத்தப் பிறவியிலாவது செல்வந்தனாய்
பிறப்பதற்கு..
நான் பிழைக்க அல்ல என் இனம் பிழைக்க!!

Tuesday, 8 September 2015

கனவிலும் நினைத்து விடாதே!

கனவிலும் என்னை ஏமாற்ற
நினைத்து விடாதே!!
அவ்வலியை என் இதயம்
தாங்கலாம்,

ஆனால் என் இரு விழிகள் அத்திறன்
பெறவில்லை...
அதன் நீரில் மூழ்கியே அது
இறந்துப் போகும்!!

பெண் கேட்க!!

அதிசயங்களும் அதிசயக்கும் பேரழகே!
நீ சொர்கதேவதையின் மகள் என்றால்
இப்பொழுதே இந்நுயிரையும் துறந்து
சொர்க்கம் புகுவேன் உன்னை
பெண் கேட்க!!!

சிவப்பின் சிறப்பு

வானவில்லின் எழு வண்ணங்களும்
பொழிவினய் இழந்து போனது
நாணத்தில் என்னவளின் கன்னங்களின்
சிவப்பிற்கு முன்னால்!!

Monday, 7 September 2015

என்ன தவம் செய்ததோ?

இசை கருவிகள் பல இவ்வுலகில்
இரைந்திருக்க,
புல்லாங்குழல் செய்த தவம் தான் என்ன?
உம் செவ்விதழின் அருகே இருக்க..

நிறங்கள் பல இவ்வுலகை நிறைத்தாலும்,
நீலம் செய்த தவம்
தான் என்ன?
உம் திருமேனியெங்கும் படர்ந்திருக்க..

பட்ச்சிகளின் இறகுகள் பல பறந்து விழுந்தாலும்,
மயில் பீலீயின் தவம் தான் என்ன?
உம் சிரசில் அமர்ந்திருக்க..

கோபியர்கள் பலர் உன் கரம் சேர துடிக்கையில்,
ராதை செய்த தவம் தான் என்ன?
உன் காதல் மனதை திருட...

அதர்மங்கலெல்லாம் என்ன தர்மம்
புரிந்து தவம் கிடந்ததோ?
உம் கரங்களினால் மடிய...

இறைவா!! இந்த பரந்த உலகம் என்ன
தவம் தான் செய்திருக்க முடியும்?
உம் அழகிய பாதம் இம்மண்ணில் பதிய....