பழகிய கிளியும்
பைந்தமிழ் கொஞ்சும்!
உயர்மலையும்த் தமிழ்
கேட்டு உருகும்!!
அமுதின் சுவையை
காணாதவர் நீரோ??
தமிழில் பேசிடு
சுவைத்திட அமுதை!!
வள்ளுவன் பெற்றான்
தமிழால் பெருமையை
இவனால் பெற்றோம்
தமிழினப்பெருமையை!!
வணங்கா முடியாரும்,
முடியுடை வேந்தரும்
முத்தமிழ் முன்
மகுடத்தை மதிப்பரோ??
கம்பனின் கவிதையில்
கரைந்தவனும் உண்டு!!
பாரதியின் பாட்டால்
பாரம் உயர்த்தியவனும் உண்டு!!
இலக்கணச்சுவையில்
இம்மொழியை மிஞ்சப்
பிற மொழி உண்டோ??
இவ்வழகிய மொழியினை
மொழிந்திட ஒரு
மொழித் தகுமோ?
அனைத்து மொழிகளும்
அலையென வாரீர்!!
இனியத் தமிழினை
இசைந்து பாடிட
வாரீர்!!!

No comments:
Post a Comment