Saturday, 14 November 2015

பெற்றோம்(மா) சுதந்திரம்!!??

வெள்ளையனை வெளியேற்றி
வெண்முரசு முழங்க
மார்தட்டுகிறோம் பெற்றோம்
சுதந்திரம்!!!

சாதியின்மேல் காதலை விடுத்து
மனதால் காதலித்து கைப்பிடிக்க
பெற்றோமா சுதந்திரம்??

“நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே!!”
என இறைவனையே மொழிந்த
தாயகத்தில் தலைவனின்
தவறை தம்பட்டம் அடிக்க
பெற்றோமா சுதந்திரம்??

பாரதி கண்ட புதுமைப் பெண்
பாரதத்தில் உலாவ
பெற்றோமா சுதந்திரம்??

இந்தியனே!! இன்னமும்
சுதந்திரம் வெள்ளையன் அளித்த
தாளில் மட்டுமே உள்ளது
நம் தாயகத்தில் இல்லை!!




அழகிய தனிமையே!!!

முளைத்த சிறகு
சிறியதெனினும்
சீறிப்பறந்த சிட்டுகளுக்கு
மத்தியில்
முளைத்த சிறகினை
கிள்ளி எறிந்து
எனை அன்பாய்
அறவனைத்தவளே!!
அழகிய தனிமையே!!
உணர்வுகள் அனைத்தும்
உணர்கின்றேன்
உன் உணர்வில் மட்டுமே!!