Monday, 14 September 2015

மூன்றுதமிழ் ஆய்ந்தகவி!!

தாய் மொழியின் பெருமையை உயர்த்திட
தன் மீசையை உயர்த்தியத் தலைவனே!!

சாதிகளெல்லாம் மாண்டு போகாதோ
நீ மறு ஜனனம் எடுத்தால்??

பல யுகமாய் என் தமிழ் தவமிருக்க
அவதாரமாய் பிறந்தாய்
தமிழ் தனலாய் எறிய!!

மரணம் தான் அழிக்குமா உன் வீரத்தை?
காலம் தான் சிதைக்குமா உன் மகத்துவத்தை??

காட்சிப் பிழைதானோ என பாடிய உன் பாட்டில்
பிழைக் காண நக்கீரனுக்கும் தகுதியில்லை!!

காலனை காலால் மிதிக்க அழைத்தாய்
பயமுற்று அவன் காலனாய் அல்லாமல்
களிற்றாய் நெருங்கிவிட்டானே!!
உன் பாதம் படாத பாதகனாகி விட்டானே!!

திரி தீப்பற்றி விளக்கெரிந்ததை கண்டுள்ளேன்
இங்கோ கண்டேன் உன் சிதை தீப்பற்றி
என் தமிழ் அனைந்ததை!!

இருமாப்புடன் எட்டு திசைக்கும் எட்டும்படி
எடுத்துரைப்பேன் இந்த எட்டயபுரத்து சிங்கம்
என் இனம் தமிழினம் என்று!!

No comments:

Post a Comment