Monday, 7 September 2015

என்ன தவம் செய்ததோ?

இசை கருவிகள் பல இவ்வுலகில்
இரைந்திருக்க,
புல்லாங்குழல் செய்த தவம் தான் என்ன?
உம் செவ்விதழின் அருகே இருக்க..

நிறங்கள் பல இவ்வுலகை நிறைத்தாலும்,
நீலம் செய்த தவம்
தான் என்ன?
உம் திருமேனியெங்கும் படர்ந்திருக்க..

பட்ச்சிகளின் இறகுகள் பல பறந்து விழுந்தாலும்,
மயில் பீலீயின் தவம் தான் என்ன?
உம் சிரசில் அமர்ந்திருக்க..

கோபியர்கள் பலர் உன் கரம் சேர துடிக்கையில்,
ராதை செய்த தவம் தான் என்ன?
உன் காதல் மனதை திருட...

அதர்மங்கலெல்லாம் என்ன தர்மம்
புரிந்து தவம் கிடந்ததோ?
உம் கரங்களினால் மடிய...

இறைவா!! இந்த பரந்த உலகம் என்ன
தவம் தான் செய்திருக்க முடியும்?
உம் அழகிய பாதம் இம்மண்ணில் பதிய....

1 comment: