Sunday, 4 October 2015

கனவுகளின் பாதை

அக்னியெனும் துன்பக்கடலில்
வளர்ந்த பிரம்மாண்ட
அக்னியின் பிரம்மனே!!

நீ படைத்த அக்னி
மட்டுமல்ல,
நீ எழுதிய அக்னி சிறகுகளும்
இளைஞனின் மன அக்னிக்கு
எரிப்பொருள் ஆனது!!

அந்நியர்கள் அலற
அக்னி படைத்தாய்!
மழலைகள் மலர
எடை குறைந்த
செயற்கை கால்கள்
அளித்தாய்!!

உன் விஞ்ஞானம்
அழியக் கூடியதல்ல
அழிவதையும்
அழிவற்றதாக்குவது!!

நீ அனைத்து
விஞ்ஞானிகளையும்
தன்னுள் அடக்கிய
மெஞ்ஞானி!!

எங்களை கனவுக்காண
செய்ய நீ கண்ட கனவுகள்
பாதியில் களைந்ததேனோ??

நீங்கள் மண்ணில்
விழவில்லை
எங்கள் மனதில்
விழுந்திருக்கிறிர்கள்
விதையாக!!
அவ்விதையின் வீரியம்
கண்டு வியக்கும்
இந்த உலகம் ஒரு நாள்!!

ஏவுகனை மனிதனே!
நீ காட்டிய பாதையில்
சென்று ஏற்றம்
காணுவோம்!!
உம் களைந்த
கனவினை நாங்கள்
கண்டு நினைவாக்குவோம்!!
நிம்மதியாக
உறங்குங்கள்!!

No comments:

Post a Comment